×

யார் இந்த நூர்ஜஹான்?!

‘நண்பன்’ பட வைரஸ் புரஃபசர் சத்யராஜ் போல இரு கைகளில் எழுத, வரைய முயற்சி செய்வோரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஏன் சில கலைஞர்கள் ஒரே நேரத்தில் பல உருவப்படங்களை உருவாக்கவும் செய்கிறார்கள்.அத்தகைய ஒரு கலைஞரான நூர்ஜஹான், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் 15 உருவப்படங்களை ஒரே நேரத்தில் உருவாக்கும் வீடியோ இணையம் முழுக்க டிரெண்டாகிவருகிறது. இந்த வீடியோவை மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். இருப்பினும் நெட்டிசன்கள் அவரது சாத்தியமற்ற திறமை குறித்து சந்தேகம் எழுப்பி வருகின்றனர். டிரெண்டாகிவரும் வீடியோவில் பல வண்ண பென்சில்கள் இணைக்கப்பட்டுக் கட்டப்பட்ட ஒரு சதுரவடிவ சட்டத்தை கையில் வைத்திருக்கிறார் அந்தப் பெண். ஒரு பெரிய தாளில் சட்டத்தை அமைத்த பிறகு, இளம் பெண் ஒரே நேரத்தில் தனித்தனி கட்டங்களில் பல கதாபாத்திரங்களின் படங்களை வரைவதாக செல்கிறது அந்த வீடியோ. பகத்சிங், பி.ஆர். அம்பேத்கர், சந்திர சேகர் ஆசாத், லால் பகதூர் சாஸ்திரி, லக்ஷ்மிபாய், மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்றோரின் ஓவியங்களை கிட்டத்தட்ட கலர் ஜெராக்ஸ் செய்யப்படுவது போல் தத்ரூபமாக வரைகிறார் அப்பெண். இது உலக சாதனை என பலராலும் கொண்டாடப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.அந்த வீடியோவை முதலில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அஜய் மீனா, அவர் அந்தப் பெயரில் கின்னஸ் சாதனை எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார், ஆனால் அவர் ஒரு கையால் ஒரே நேரத்தில் 15 ஓவியங்களை வரைந்ததாகச் சொல்கிறார். நூர்ஜஹான் தினமும் சில மணி நேரம் உழைத்து ஒரு மாத காலத்தில் இந்த ஓவியங்களை வரைந்துள்ளார் என்றும் அவர் தெளிவு படுத்தியுள்ளார். இருப்பினும், அத்தகைய சாதனைக்கான சாத்தியம் குறித்து சந்தேகங்கள் உள்ளன, மேலும் வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும் முடியவில்லை.இதுகுறித்து ஆனந்த் மஹிந்த்ராவும் கேள்விகள் எழுப்பியுள்ளார். ‘இது எப்படி சாத்தியம்? அவர் ஒரு திறமையான கலைஞர் என்பது தெளிவாகிறது. ஆனால் ஒரே நேரத்தில் 15 ஓவியங்களை வரைவது கலைக்கே விடும் சவால் – இது ஒரு அதிசயம்! அவருக்கு அருகில் இருக்கும் யாராவது இந்த சாதனையை உறுதிப்படுத்த முடியுமா? ஒருவேளை இது உண்மையாயின் அவர் ஊக்குவிக்கப்பட வேண்டும் மற்றும் உதவித்தொகை ,பிற வகையான ஆதரவை வழங்கு வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் இந்த வீடியோ முழுக்க முழுக்க இயற்பியலுக்கு எதிரான செயலாக இருக்கிறது’ எனவும் கூறியுள்ளார் ஆனந்த். எது எப்படியோ அவர் ஒவ்வொரு படமாக வரைந்திருந்தாலும்கூட 15 பென்சில்கள் அடங்கிய சட்டத்தில் ஒற்றைப் படம் வரைவதும் கூட கடினமே. டைம்லேப்ஸ் வீடியோவாகவே இருப்பினும் இவரின் திறமை கண்டெடுத்துப் பாராட்டப்படக் கூடியது. நூர்ஜஹான் என நம்பப்படும் இந்த ஓவியப் பெண்ணை இப்போது இணையம் தேடிக்கொண்டிருக்கிறது….

The post யார் இந்த நூர்ஜஹான்?! appeared first on Dinakaran.

Tags : Noorjahan ,Sathyaraj ,
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி